ADDED : ஜூன் 12, 2025 02:35 AM

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரத்தில் தி.மு.க., ஓட்டுச்சாவடி முகவர்களுக்கான ஆலோசனை  கூட்டம் நடந்தது.
இதில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி   பேசியதாவது:
தி.மு.க., ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட திட்டங்களை எடுத்து   கூறி புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்.
விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை கிடைக்க விண்ணப்பங்கள் எளிமைப்படுத்தப்படும்.
2026  தேர்தலில் ஒட்டன்சத்திரம் தொகுதியில் அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் வகையில் அரசின் திட்டங்களை மக்களிடம் எடுத்து செல்ல வேண்டும் என்றார்.
மாவட்ட அவைத் தலைவர் மோகன் தலைமை வகித்தார்.  தொகுதி பொறுப்பாளர் பரணிமணி,  மாவட்ட துணைச் செயலாளர் ராஜாமணி, ஒன்றிய செயலாளர்கள் ஜோதீஸ்வரன், தர்மராஜன், சுப்பிரமணியன், பொன்ராஜ், பாலு, தலைமை செயற்குழு உறுப்பினர் கண்ணன்,  பொதுக்குழு உறுப்பினர்கள் செல்வராஜ்,  வெங்கடுசாமி, நகராட்சி தலைவர் திருமலைச்சாமி,  முன்னாள் ஒன்றிய  தலைவர் தங்கம் கலந்து கொண்டனர்.

