ADDED : டிச 13, 2025 05:56 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் தி.மு.க.,சார்பில் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி' செயல் திட்டம் பற்றி ஆலோசனை, ஆய்வுக் கூட்டம் வார்டு செயலாளர் ஜான் கென்னடி தலைமையில் நடந்தது. பழநி எம்.எல்.ஏ., செந்தில்குமார் பேசினார். மாநகர செயலாளர் ராஜப்பா, மேயர் இளமதி, மாவட்ட துணை செயலாளர் பிலால் உசேன், பொருளாளர் சரவணன் கலந்து கொண்டனர்.
வேடசந்துார்: தெற்கு ஒன்றியம், பேரூர் தி.மு.க., சார்பில் என் வாக்குச் சாவடி, வெற்றி வாக்குச்சாவடி பொறுப்பாளர் அறிமுக கூட்டம் நடந்தது. தி.மு.க., ஒன்றிய செயலாளர் வீரா.சாமிநாதன் தலைமை வகித்தார். பேரூர் செயலாளர் கார்த்திகேயன், முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் சவுடீஸ்வரி முன்னிலை வகித்தனர். மாவட்ட அவைத் தலைவர் மோகன் பேசினார்.

