sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 02, 2025 ,ஐப்பசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

புறக்கணித்த தி.மு.க., கவுன்சிலர்கள் சின்னாளபட்டியில் ரகசிய கூட்டம்

/

புறக்கணித்த தி.மு.க., கவுன்சிலர்கள் சின்னாளபட்டியில் ரகசிய கூட்டம்

புறக்கணித்த தி.மு.க., கவுன்சிலர்கள் சின்னாளபட்டியில் ரகசிய கூட்டம்

புறக்கணித்த தி.மு.க., கவுன்சிலர்கள் சின்னாளபட்டியில் ரகசிய கூட்டம்


ADDED : ஆக 29, 2025 03:31 AM

Google News

ADDED : ஆக 29, 2025 03:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சின்னாளபட்டி: பிரச்னைக்குரிய விவாதத்தை பேரூராட்சி தலைவர் அறையில் நடத்தியதால் சின்னாளபட்டி தி.மு.க., கவுன்சிலர்கள் புறக்கணித்தனர்.

பேரூராட்சியில் அனைத்து வார்டிலும் தி.மு.க., கவுன்சிலர்களே உள்ளதால் ஆளுங்கட்சி வசமானது. உறவினர் தலையீடு, பணிகள் ஒதுக்கீடில் கட்சி நிர்வாகிகள், கவுன்சிலர்கள் இடையே துவக்கம் முதலே பனிப்போர் நீடிக்கிறது. தலைவர், நிர்வாக செயல்பாடுகளை கண்டித்து கூட்ட அரங்கில் தர்ணா, நுழைவாயில் முற்றுகை, நடுரோட்டில் தர்ணா என தொடர்கிறது.

இதனிடையே நேற்று பேரூராட்சி கூட்டத்தில் ஒப்பந்தம், திட்டப்பணி ஒதுக்கீட்டில் பாரபட்சம், முறைகேடு புகார்கள் தொடர்பாக காரசார விவாதத்திற்கு சில கவுன்சிலர்கள் ஆயத்தமாக இருந்தனர். இதன் தகவலறிந்து தலைவர் அறையில் 17 கவுன்சிலர்கள் பங்கேற்ற ரகசிய கூட்டம் நடந்தது. அதிருப்தி கவுன்சிலர்களை சமரசம் செய்ய பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு தலைவர் பிரதீபா (தி.மு.க.,) தலைமையில் வழக்கமான அறையில் கூட்டம் நடந்தது. செயல் அலுவலர் இளவரசி முன்னிலை வகித்தார்.

பங்கேற்ற தி.மு.க., கவுன்சிலர்கள் சுப்பிரமணி, ரவிக்குமார், ராஜூ, ராஜசேகர் ஆகியோர் வழக்கமான கூட்டத்தை புறக்கணித்து அலுவலகத்தில் அமர்ந்திருந்தனர். ஏற்கனவே வழங்கிய அஜன்டாவை இளநிலை உதவியாளர் கலைச்செல்வி வாசிக்க கூடுதல் தீர்மானம் எனக்கூறி தலைவர் தனது அலைபேசியை வழங்கினார். அதில் இருந்த கூடுதல் பஸ் வசதி குறித்த தீர்மானம் கவுன்சிலர்களுக்கு வழங்காமல் வெறுமனே வாசித்து கூட்டத்தை சில நிமிடங்களில் முடித்தனர்.






      Dinamalar
      Follow us