/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பல்கலை பயிற்சியாளர் மீது தி.மு.க., புகார்
/
பல்கலை பயிற்சியாளர் மீது தி.மு.க., புகார்
ADDED : நவ 30, 2024 05:41 AM
சின்னாளபட்டி; காந்திகிராம பல்கலை பயிற்சியாளர் மீது நடவடிக்கை கோரி தி.மு.க.,வினர் பல்கலை நிர்வாகத்திடம் மனு அளித்தனர்.
திண்டுக்கல் கிழக்கு மாவட்ட மாணவரணி அமைப்பளர் அஸ்வின் பிரபாகரன் தலைமையில் தி.மு.க.,வினர் காந்திகிராம பல்கலை பொறுப்பு பதிவாளர் ராதாகிருஷ்ணனிடம் மனு அளித்தனர்.
அதில், காந்திகிராம பல்கலை சுகாதார ஆய்வாளர் பிரிவு பயிற்சியாளர் ரங்கநாதன் மாணவர்கள், சமூக வலைதள குழுக்களிலும் ஒரு அரசியல் கட்சிக்கு ஆதரவாக பாடம் நடத்தி வருகிறார்.
வகுப்பறையில் மாணவர்களை தவறாக வழிநடத்தியதாக ஏற்கனவே மாணவர்கள் புகார் அளித்துள்ளனர். இவற்றின் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்திருந்தனர்.ஆத்துார் கிழக்கு ஒன்றிய செயலாளர் முருகேசன் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

