/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கபடி போட்டிக்கு தேர்வான மாணவர்களுக்கு தி.மு.க.,உதவி
/
கபடி போட்டிக்கு தேர்வான மாணவர்களுக்கு தி.மு.க.,உதவி
கபடி போட்டிக்கு தேர்வான மாணவர்களுக்கு தி.மு.க.,உதவி
கபடி போட்டிக்கு தேர்வான மாணவர்களுக்கு தி.மு.க.,உதவி
ADDED : ஜன 18, 2024 06:19 AM

நத்தம் : தேசிய கபடி போட்டிக்கு தேர்வான -நத்தம் சமுத்திராப்பட்டி அரசு பள்ளி மாணவர்களுக்கு தி.மு.க., சார்பாக உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
நத்தம் சமுத்திராப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் சுபாஷினி, தீபக் ஆகிய 2 மாணவர்கள் 14 வயதுபிரிவு உட்பட்ட தேசியப் போட்டியில் விளையாடி வருகின்றனர். மேலும் இதே பள்ளியில் படித்த தனபால், ஜனகராஜ், ஹரி கிருஷ்ணன் உள்ளிட்ட மாணவர்களும் ரிங்க்பால் போட்டியில் தேர்வாகி மாநில அணியில் விளையாடி வருகின்றனர். இந்த மாணவர்களை கவுரவிக்கும் விதமாக தி.மு.க., சார்பில் பாராட்டு, ஊக்கத்தொகை வழங்கும் விழா நடந்தது.
முன்னாள் எம்.எல்.ஏ., ஆண்டி அம்பலம், நத்தம் பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா, ஒன்றிய செயலாளர் ரத்தினகுமார் ஆகியோர் மாணவர்களின் பெற்றோர்களுக்கு சால்வை அணிவித்து மரியாதை செய்து ஊக்கத்தொகை வழங்கினர். தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர் முத்துக்குமாரசாமி, பேரூராட்சி துணைத் தலைவர் மகேஸ்வரி சரவணன், தி.மு.க., நிர்வாகிகள் கணேசன், கலிபுல்லா, இஸ்மாயில், இன்ஜினியர் சுப்பிரமணி, ரஜபுதீன்,கார்த்தி,பிரபு, பாலசுப்பிரமணி கலந்து கொண்டனர்.