நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை: வடமதுரையில் ஒன்றிய தி.மு.க., பூத் ஏஜன்ட்கள், பொறுப்பாளர்கள் அறிமுக கூட்டம் செயலாளர் சுப்பையன் தலைமையில் நடந்தது.
மாநில தீர்மானக்குழு இணை செயலாளர் நாச்சிமுத்து முன்னிலை வகித்தார். நகர செயலாளர்கள் கணேசன், கருப்பன், நெசவாளரணி அமைப்பாளர் சொக்கலிங்கம், இலக்கிய அணி அமைப்பாளர் இளங்கோ, அவைத்தலைவர் முனியப்பன், துணை செயலாளர் சுப்பையா பங்கேற்றனர். கரூரில் யார் வேட்பாளராக போட்டியிட்டாலும் முதல்வர் ஸ்டாலின் போட்டியிடுவதாகவே கருதி பணியாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

