நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை : பிலாத்து கம்பிளியம்பட்டியில் வடமதுரை மேற்கு ஒன்றிய தி.மு.க., இளைஞரணி சார்பில் மாநில அரசின் 4 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடந்தது.
ஒன்றிய செயலாளர் சுப்பையன் தலைமை வகித்தார். இளைஞர் அணி செயலாளர் சிவா வரவேற்றார். பேச்சாளர்கள் கருணாநிதி, ஷாலினி, மாவட்ட நிர்வாகிகள் சொக்கலிங்கம், முருகேசன் இளங்கோ, பொருளாளர் செந்தில்முருகன் பங்கேற்றனர். வடமதுரை ஏ.வி.பட்டியில் நடந்த பொதுக்கூட்டத்திற்கு நகர செயலாளர் கணேசன் தலைமை வகித்தார். இளைஞர் அணி அமைப்பாளர் சந்தானம், துணைச் செயலாளர் வீரமணி பங்கேற்றனர்.