/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தி.மு.க., பேனரை கிழித்த கட்சி நிர்வாகி; வெளிப்படையாக அரங்கேறிய உள்கட்சி பூசல்

ADDED : பிப் 03, 2024 05:05 AM

செம்பட்டி : ஆத்துார் மேற்கு ஒன்றிய உட்கட்சி பூசல் எதிரொலியாக கோடங்கிபட்டியில் அமைக்கப்பட்டிருந்த தி.மு.க., பேனர் கிழித்து சேதப்படுத்தப்பட்டது.
ஆத்துார் மேற்கு ஒன்றிய கட்சி பதவியை கைப்பற்றுவது தொடர்பாக சமீப காலமாக தி.மு.க.,வில் கடும் போட்டி நிலவி வருகிறது. இதையடுத்து உட்கட்சி பூசல் பல்வேறு நிலைகளில் வெளிப்பட்டு வருகிறது. நேற்று ஆத்துார் ஒன்றியத்திற்கு உட்பட்ட அக்கரைப்பட்டி, வீரக்கல், கோடாங்கிபட்டி பகுதிகளில் நடந்த ரேஷன் கடை திறப்பு விழாவில் அமைச்சர் ஐ.பெரியசாமி பங்கேற்றார்.
இதற்காக பல இடங்களில் தி.மு.க.,வினர் பேனர் அமைத்திருந்தனர். கோடாங்கி பட்டி விலக்கு பகுதியில் சீவல்சரகு ஊராட்சி தலைவர் ராணி சார்பில் வைத்திருந்த பேனரை, இதே பகுதியைச் சேர்ந்த தி.மு.க .,மாவட்ட பிரதிநிதி கிருஷ்ணமூர்த்தி கத்தியால் கிழித்து சேதப்படுத்தினார். விழா முடிந்து காரில் புறப்பட முயன்ற அமைச்சரிடம் தன்னை கட்சி நிர்வாகிகள் புறக்கணிப்பதாக கூறி சம்பவத்தை விளக்கினார்.