/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தே.மு.தி.க., பிரமுகர் கோடவுனுக்கு தீவைப்பு
/
தே.மு.தி.க., பிரமுகர் கோடவுனுக்கு தீவைப்பு
ADDED : அக் 16, 2024 02:15 AM

வடமதுரை:திண்டுக்கல் மாவட்டம் அய்யலுாரில் தே.மு.தி.க., பிரமுகரின் கோடவுனுக்கு மர்மநபர்கள் தீ வைத்ததில் பொருட்கள் எரிந்து சேதமாயின.
வடமதுரை பஞ்சம்தாங்கியை சேர்ந்த தே.மு.தி.க., மாவட்ட மாணவரணி செயலாளர் வடிவேல். அய்யலுாரில் திண்டுக்கல் திசையில் உள்ள சர்வீஸ் ரோடு பகுதியில் 6 மாதங்களுக்கு முன் ஒரு இடத்தை விலைக்கு வாங்கினார். இந்த இடம் தொடர்பாக முந்தைய உரிமையாளர்களுக்கும் அவர்களது உறவினர்களுக்கும் இடையே நீண்ட காலமாக தகராறு நடந்து வந்தது.
இந்நிலையில் இந்த இடத்தில் வடிவேல் , பக்க வாட்டில் தகர சீட்கள்,ஆஸ்பெஸ்ட்டாஸ் கூரையுடன் கோடவுன் அமைத்தார். முருங்கை காய்களை பேக்கிங் செய்து வெளியூர் அனுப்ப பயன்படுத்தப்படும் 200 பண்டல் ஓலை பாய்களையும், 70 பண்டல் பிளாஸ்டிக் கோணி பைகளையும் அதில் இருப்பு வைத்திருந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை மர்மநபர்கள் தீ வைத்ததில் கோடவுன் முற்றிலும் எரிந்தது. பொருட்கள் கருகின.
வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.