நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னாளபட்டி : ஆத்துார் ஒன்றியம் பிள்ளையார் நத்தம் பகுதியில் கிழக்கு ஒன்றிய தி.மு.க., சார்பில் 'இல்லம் தோறும் ஸ்டாலின் குரல்' என்ற பிரசார நிகழ்ச்சி நடந்தது.
தொகுதி பொறுப்பாளர் கள்ளிப்பட்டி மணி தலைமை வகித்தார். கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் காமாட்சி, ஆத்துார் ஒன்றிய தலைவர் மகேஸ்வரி முருகேசன், பிள்ளையார்நத்தம் ஊராட்சி தலைவர் உலகநாதன், மாவட்ட கவுன்சிலர் பத்மாவதி ராஜ கணேஷ் முன்னிலை வகித்தனர். கிழக்கு ஒன்றிய செயலாளர் முருகேசன் வரவேற்றார். ஆதி திராவிடர் காலனியில் துண்டு பிரசுரங்கள் வினியோகிக்கப்பட்டது.

