/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
துாண்டுதலால் விவசாயிகள் போராட்டம் சொல்கிறார் த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன்

ADDED : பிப் 22, 2024 03:06 AM
திண்டுக்கல்:''விவசாயிகளின் போராட்டம் சில கட்சிகளின் துாண்டுதலின்பேரில் நடைபெறுவதாக, ''த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்தார்.
திண்டுக்கல்லில் அவர் கூறியதாவது : லோக்சபா தேர்தல் கூட்டணி குறித்து உரிய நேரத்தில் அறிவிப்பு வெளியிடுவோம். கடந்த தேர்தலில் அ.தி.மு.க., கூட்டணியில் இடம் பெற்றிருந்த கட்சிகளோடு தற்போதும் தோழமையுடன் இருந்து வருகிறோம். எந்த கூட்டணியில் இடம் பெற்றிருந்தாலும் அதில் த.மா.கா., முக்கிய கட்சியாக செயல்படும்.
இண்டியா கூட்டணியின் நிலை கவலைக்குரியதாக உள்ளது. வெற்றியை நிர்ணயிப்பது வாக்காளர்கள். மக்களின் ஆதரவை யாராலும் உறுதிப்படுத்த முடியாது. சைக்கிள் சின்னத்தை பெறுவதற்கான அனைத்து வாய்ப்புகளையும் அணுகுவோம்.
விவசாயிகளின் போராட்டம் நியாயமாக இருந்தாலும் கூட சில கட்சிகளின் துாண்டுதலின்பேரில் நடைபெறுகிறது. தற்போதைய மத்திய அரசு விவசாயிகளின் அரசாகவும், விவசாயிகளின் எண்ணங்களை பிரதிபலிக்கும் அரசாகவும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்றார்.