sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 20, 2025 ,கார்த்திகை 4, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

அமித்ஷாவுக்கு எதிராக தி.மு.க., ஆர்ப்பாட்டம்

/

அமித்ஷாவுக்கு எதிராக தி.மு.க., ஆர்ப்பாட்டம்

அமித்ஷாவுக்கு எதிராக தி.மு.க., ஆர்ப்பாட்டம்

அமித்ஷாவுக்கு எதிராக தி.மு.க., ஆர்ப்பாட்டம்


ADDED : டிச 20, 2024 03:23 AM

Google News

ADDED : டிச 20, 2024 03:23 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அம்பேத்கர் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை பதிவு செய்ததை கண்டித்து திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கிழக்கு மாவட்ட செயலாளர் எம்.எல்.ஏ., செந்தில்குமார் தலைமை வகித்தார். துணை மேயரும் மாநகர செயலாளருமான ராஜப்பா, ஒன்றிய செயலாளர்கள் வெள்ளிமலை, நெடுஞ்செழியன் முன்னிலை வகித்தார்.

மேயர் இளமதி,மாவட்ட துணை செயலாளர் நாகராஜன், பொருளாளர் சத்தியமூர்த்தி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் நடராஜன், தண்டபாணி, மாநகர துணை செயலாளர் அழகர்சாமி, பொருளாளர் சரவணன் பங்கேற்றனர்.

வத்தலக்குண்டு : வத்தலக்குண்டில் ஒன்றிய செயலாளர் முருகன் தலைமை வகித்தார். நகரச் செயலாளர் சின்னதுரை, தங்கராஜன், அருண்குமார் முன்னிலை வகித்தனர்.

பேரூராட்சி தலைவர் சிதம்பரம், அவைத்தலைவர் செல்வராஜ், ஒன்றிய, கிளை நிர்வாகிகள், கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.தெற்கு ஒன்றியம் சார்பில் விருவீட்டில் ஒன்றிய செயலாளர் கனிகுமார் தலைமை வகித்தார்.

பழநி : பழநியில் நகர செயலாளர் வேலுமணி தலைமை வகித்தார்.ஆயக்குடியில் பேரூராட்சி செயலாளர் சின்னத்துரை தலைமை வகித்தார்.

ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் ஒன்றியம், நகர தி.மு.க., சார்பில் பஸ் ஸ்டாண்ட் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட அவைத் தலைவர் மோகன், நகரச் செயலாளர் வெள்ளைச்சாமி, ஒன்றிய செயலாளர்கள் ஜோதீஸ்வரன், பாலு, தலைமை செயற்குழு உறுப்பினர் கண்ணன், பொதுக்குழு உறுப்பினர் செல்வராஜ், நகராட்சி தலைவர் திருமலைசாமி கலந்து கொண்டனர்.

தொப்பம்பட்டி ஒன்றியம், கீரனுார் பேரூராட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளர் ராஜாமணி, ஒன்றிய செயலாளர்கள் சுப்பிரமணியன், பொன்ராஜ், பேரூர் செயலாளர் காதர்பாட்ஷா கலந்து கொண்டனர்.

சாணார்பட்டி:சாணார்பட்டி தெற்கு,வடக்கு ஒன்றிய தி.மு.க.,,இண்டி கூட்டணி சார்பில் கோபால்பட்டி பஸ் ஸ்டாப்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மேற்கு மாவட்ட பொருளாளர் க.விஜயன் தலைமை வகித்தார். தி.மு.க., திண்டுக்கல் மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் சுந்தரராஜன், தெற்கு ஒன்றிய செயலாளர் தர்மராஜன், வடக்கு ஒன்றிய செயலாளர் மோகன்,ஒன்றிய குழு தலைவர் பழனியம்மாள், துணைத்தலைவர் ராமதாஸ், துணைச் செயலாளர் டாக்டர் காளியப்பன், ம.தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் பாலகுரு, பாலன், காங்கிரஸ் ஒன்றிய தலைவர்கள்

ராஜ்கபூர், ராமகிருஷ்ணன்,கம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் வெள்ளைக்கண்ணு, ஊராட்சி தலைவர்கள் கவிதா தர்மராஜன்,தேவி ராஜா சீனிவாசன், தமிழரசி கார்த்திகை சாமி கலந்து கொண்டனர்.

நத்தம்: நத்தத்தில் முன்னாள் எம்.எல்.ஏ., ஆண்டிஅம்பலம் தலைமை வகித்தார்.நகர செயலாளர் ராஜ்மோகன், ஒன்றிய செயலாளர்கள் ரத்தினக்குமார், பழனிச்சாமி, பேரூராட்சி தலைவர் சேக் சிக்கந்தர் பாட்சா முன்னிலை வகித்தனர்.

வேடசந்துார் : வேடசந்துார் தொகுதி தி.மு.க., சார்பில் மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து வேடசந்துார் அம்பேத்கர் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

எம்.எல்.ஏ., காந்திராஜன் தலைமை வகித்தார். பேரூர் செயலாளர் கார்த்திகேயன் வரவேற்றார்.

ஒன்றிய செயலாளர்கள் வீரா.சாமிநாதன், கவிதா, ஒன்றிய தலைவர் சவுடீஸ்வரி முன்னிலை வகித்தனர். ஒன்றிய செயலாளர்கள் ஆலம்பாடி சீனிவாசன், ராஜலிங்கம், சுப்பையன், பாண்டி, பேரூர் செயலாளர்கள் செந்தில்குமார், கதிரவன், கணேசன், கருப்பன், பழனிச்சாமி, தி.மு.க., நிர்வாகிகள், மருதபிள்ளை, பன்னீர்செல்வம், தர்மராஜ், முத்துகிருஷ்ணன், பாண்டியன், மணிமாறன், சவுந்தர், மாரிமுத்து, சம்பத், கருப்பையா, சுப்பிரமணி பங்கேற்றனர். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் ரவிசங்கர் நன்றி கூறினார்.

காங். ஆர்ப்பாட்டம்


திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட காங்., சார்பில் மணிக்கூண்டு அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாநகர காங்.,தலைவர் துரை மணிகண்டன் தலைமை வகித்தார். மொழிப்போர் தியாகி ராமு ராமசாமி முன்னிலை வகித்தார்.

மாவட்ட இளைஞர் காங்., தலைவர் முகமது அலியார், மேற்கு மாவட்ட செயலாளர் அப்பாஸ் மந்திரி, பொது கணக்கு குழு உறுப்பினர் சிவாஜி, மாவட்ட செயலாளர் வேங்கை ராஜா, மகிளா காங்கிரஸ் தலைவி ரோஜா பேகம் பங்கேற்றனர்.

வி.சி.க., வினர் கைது


திண்டுக்கல் : திண்டுக்கல்லில் வி.சி.க., சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து ரயில்வே ஸ்டேஷன் பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். இதனிடையே மாவட்ட செயலர் மைதீன்பாவா தலைமையில் ரயில்வே ஸ்டேஷன் வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். உருவ பொம்மை எரிக்கப்பட்டது. 25 க்கு மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.






      Dinamalar
      Follow us