/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தி.மு.க., சேலம் மாநாடு ஒரு சர்க்கஸ் மாநாடு: நடிகை விந்தியா பேச்சு
/
தி.மு.க., சேலம் மாநாடு ஒரு சர்க்கஸ் மாநாடு: நடிகை விந்தியா பேச்சு
தி.மு.க., சேலம் மாநாடு ஒரு சர்க்கஸ் மாநாடு: நடிகை விந்தியா பேச்சு
தி.மு.க., சேலம் மாநாடு ஒரு சர்க்கஸ் மாநாடு: நடிகை விந்தியா பேச்சு
ADDED : ஜன 30, 2024 06:53 AM

பழநி : ''தி.மு.க.,வின் சேலம் மாநாடு கின்னஸ் மாநாடு அல்ல. அது ஒரு சர்க்கஸ் மாநாடு,''என பழநியில் அ.தி.மு.க., கொள்கை பரப்பு இணை செயலாளரான நடிகை விந்தியா பேசினார்.
பழநியில் அ.தி.மு.க., சார்பில் நடந்த எம்.ஜி.ஆர்.பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில்
அவர் பேசியதாவது; :ஆளத் தெரியாத தி.மு.க., அரசு பழநியில் நீதிமன்ற உத்தரவு பெயரில் சாலை வியாபாரிகள் கடைகளை இடித்தது.
ஆனால் அமைச்சர் பொன்முடி மீதான வழக்கில் நீதிமன்ற தீர்ப்பின்படி அவரை கைது செய்யவில்லை. செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக உள்ளார். பழநியில் நகராட்சி சார்பில் குப்பை அகற்றப்படுவதில்லை.
அ.தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் தி.மு.க., உள்ளிட்ட குப்பை முற்றிலும் அகற்றப்படும். தி.மு.க.,வின் சேலம் மாநாடு கின்னஸ் மாநாடு அல்ல. அது சர்க்கஸ் மாநாடு.
மகளிர் உரிமை தொகை குறிப்பிட்ட வகை ரேஷன் கார்டு உள்ளவர்களுக்கு மட்டுமே வழங்கி வருகிறது. அனைத்து பிரச்னைகளுக்கும் அமைச்சர் சேகர்பாபு பதில் அளிக்கிறார்.
ஸ்டாலின் முதல்வரா, சேகர்பாபு முதல்வரா என்ற சந்தேகம் உள்ளது என்றார்.
நத்தம் விஸ்வநாதன் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பேசியதாவது: தமிழகத்தில் தி.மு.க, ஆட்சி நடக்கவில்லை நடக்க கூடாத நிகழ்வுகளின் காட்சி நடந்து கொண்டிருக்கிறது.
எப்படி ஆட்சி நடத்தக் கூடாது என்பதற்கான உதாரணம் தி.மு.க., ஆட்சி. எப்படி ஆட்சி நடத்த வேண்டும் என்பதற்கு உதாரணம் ஜெ.,யின் ஆட்சி. அதன்படிதான் பழனிச்சாமியும் ஆட்சி நடத்தினார்.
நாடாளுமன்ற தேர்தலும் சட்டசபை தேர்தலும் ஒன்றாக வந்தால் தி.மு.க., ஆட்சி இருக்காது.
சிறுபான்மை மக்களின் பேராதரவு அ.தி.மு.க.,வுக்கு கிடைத்து வருவது கண்டு தி.மு.க., பொய்பிரசாரம் செய்து வருகிறது. தி.மு.க., ஹிந்து மதத்திற்கு எதிரானது.
தி.மு.க தலைமை ஹிந்து மத பண்டிகைகளுக்கு வாழ்த்து சொல்வதில்லை என்றார்.
எம்.ஜி.ஆர் ., இளைஞர் அணி துணைச் செயலாளர் ரவி மனோகரன், பேச்சாளர் சுப்பிரமணியன், பேரவை இணைச் செயலாளரும், நத்தம் ஒன்றிய தலைவருமான கண்ணன், மாவட்ட அவைத் தலைவர் குப்புசாமி, பொருளாளர் வேணுகோபாலு, எம்.ஜி.ஆர் மன்ற இணைச் செயலாளர் குமாரசாமி, நகரச் செயலாளர் முருகானந்தம், இளைஞர் அணி செயலாளர் அன்வர்தீன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜா முஹம்மது, ஒன்றிய செயலாளர்கள் மாரியப்பன், முத்துசாமி, நகரச் செயலாளர் ஸ்ரீதர்,ஒன்றிய செயலாளர்கள் சந்திரமோகன், தாமோதரன், பேரூர் செயலாளர்கள் சக்திவேல், விஜயசேகரன், சசிகுமார், சண்முகசுந்தரம், மாவட்ட மீனவர் அணி செயலாளர் மகுடீஸ்வரன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சதீஷ்குமார், கலை பிரிவு செயலாளர் ஹக்கீம் கலந்து கொண்டனர்.