ADDED : மார் 02, 2026 07:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குஜிலியம்பாறை: குஜிலியம்பாறை ஒன்றியம் கூம்பூர் ஊராட்சியில் தெற்கு ஒன்றிய தி.மு.க., சார்பில் தமிழக அரசின் ஐந்து ஆண்டுகால சாதனைகள் குறித்த தெருமுனைப் பிரசாரம் நடந்தது.
மாவட்ட பொறியாளர் அணி செயலாளர் இளங்கோ தலைமை வகித்தார். நிர்வாகிகள் கருப்பையா, சுரேஷ் முன்னிலை வகித்தனர். மகளிர் இலவச பேருந்து பயணம், மக்களைத் தேடி மருத்துவம், இல்லம் தேடிக் கல்வி, மகளிருக்கான மாதம் ரூ.ஆயிரம் உள்ளிட்ட திட்டங்களை விளக்கி கூறினர். நிர்வாகிகள் ஆறுமுகம், கருப்பன், கந்தசாமி, குமார், வேலுமணி, சுந்தரராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

