/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தி.மு.க., பிரமுகரை கொன்ற இருவருக்கு கை, கால் முறிவு
/
தி.மு.க., பிரமுகரை கொன்ற இருவருக்கு கை, கால் முறிவு
தி.மு.க., பிரமுகரை கொன்ற இருவருக்கு கை, கால் முறிவு
தி.மு.க., பிரமுகரை கொன்ற இருவருக்கு கை, கால் முறிவு
ADDED : செப் 29, 2024 02:49 AM

வேடசந்துார்:திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துார் தி.மு.க., தெற்கு ஒன்றிய பொருளாளர் மாசி. கடந்த 26ம் தேதி இரவு 7:00 மணிக்கு அவரது தோட்டத்தின் அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்டார். கொலையாளிகள் மதுமோகன், சரவணகுமார் மதுரை வாடிப்பட்டி போலீசில் சரணடைந்தனர்.
இவர்களிடம், வேடசந்துார் இன்ஸ்பெக்டர் வேலாயுதம் விசாரணை நடத்திய நிலையில், கொலை நடந்த பெருமாள்கவுண்டம்பட்டி குளம் பகுதிக்கு இருவரையும் அழைத்துச் சென்றனர். அங்கு மறைத்து வைத்திருந்த ஆயுதங்களை பார்வையிட்ட போது, குற்றவாளிகள் இருவரும் போலீசாரை தள்ளிவிட்டு தப்பினர்.
போலீசார் விரட்டிய போது, மதுமோகன் கல் தடுக்கி கீழே விழுந்ததில் அவரது வலது கை எலும்பு முறிந்தது. மாற்று திசையில் ஓடிய சரவணகுமாருக்கு இடது கால் எலும்பு முறிந்தது.
இருவரையும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சைக்குப் பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.