/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தி.மு.க., ஒன்றிய கவுன்சிலரின் கணவர் வெட்டி கொலை
/
தி.மு.க., ஒன்றிய கவுன்சிலரின் கணவர் வெட்டி கொலை
ADDED : செப் 27, 2024 02:36 AM

வேடசந்துார்:திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துார் ஒன்றியம் நாகம்பட்டி ஊராட்சியில் ஒன்றிய கவுன்சிலராக இருப்பவர் முத்துமாரி. இவரது கணவர், தி.மு.க., தெற்கு ஒன்றிய பொருளாளர் மாசி, 40; ரியல் எஸ்டேட் தொழிலதிபர். நேற்று மாலை 7:00 மணிக்கு பெருமாள் கவுண்டன்பட்டியில் இருந்து டூ - வீலரில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.
அப்போது சமத்துவபுரம் அருகே மர்ம நபர்கள் சிலர் அவரை அரிவாளால் வெட்டினர். இதை தொடர்ந்து, மாசி டூ - வீலரை கீழே போட்டு விட்டு தப்பி ஓடினார். தொடர்ந்து விரட்டிச் சென்று கொடூரமாக வெட்டி கொலை செய்தனர். வலது கை மணிக்கட்டுக்கும் கீழ் துண்டாகி தனியாக விழுந்தது. தொழில் போட்டி காரணமாக கொலை செய்தனரா அல்லது வேறு காரணங்கள் உள்ளதா என வேடசந்துார் டி.எஸ்.பி., இலக்கியா விசாரிக்கிறார்.
கொலையை கண்டித்து, இங்குள்ள அரசு மருத்துவமனை முன் உறவினர்கள், மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.