ADDED : நவ 18, 2024 06:24 AM

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் தி.மு.க.,கிழக்கு,மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நடந்தது. அவைத்தலைவர்கள் மோகன், காமாட்சி தலைமை வகித்தனர். மேற்கு மாவட்ட செயலாளரும் உணவுத்துறை அமைச்சருமான சக்கரபாணி,கிழக்கு மாவட்ட செயலாளர் எம்.எல்.ஏ.,செந்தில்குமார் பேசினர். நவ.27ல் துணை முதல்வர் உதயநிதி பிறந்த நாளை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் கட்சி கொடி ஏற்றி இனிப்பு வழங்குதல், பொதுக் கூட்டங்கள், தெருமுனை பிரசாரம், நலத்திட்ட உதவிகள்,விளையாட்டுப் போட்டிகள் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தவும், சட்டசபை தேர்தலில் திண்டுக்கல் மாவட்டத்தில் 7 தொகுதியையும் தி.மு.க., கூட்டணி கைப்பற்ற முழு வீச்சில் செயல்பட வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
வேடசந்துார் எம்.எல்.ஏ.,காந்தி ராஜன், தலைமை தேர்தல் தொகுதி பொறுப்பாளர்கள் ரஞ்சன் துரை, சல்மா, மேயர் இளமதி,மாநகர செயலாளர் ராஜப்பா, மாவட்ட துணை செயலாளர் நாகராஜன்,பொருளாளர் விஜயன், ஒன்றிய செயலாளர் வெள்ளிமலை, பொருளாளர் சரவணன், மண்டல தலைவர்கள் ஜான் பீட்டர், ஆனந்த் பங்கேற்றனர்.