/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நாளை தி.மு.க., செயற்குழு கூட்டம்
/
நாளை தி.மு.க., செயற்குழு கூட்டம்
ADDED : பிப் 24, 2024 03:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் கிழக்கு, மேற்கு மாவட்ட தி.மு.க., செயற்குழு கூட்டம் திண்டுக்கல் கலைஞர் மாளிகையில் நாளை (பிப்.25) மதியம் 12:00 மணிக்கு நடைபெறுதாக மாவட்ட செயலர்கள் சக்கரபாணி, செந்தில்குமார் தெரிவித்துள்ளனர். அவைத்தலைவர்கள் காமாட்சி, மோகன் தலைமையில் நடக்கும் இதில் தி.மு.க., துணைப் பொதுசெயலர் பெரியசாமி பேசுகிறார்.
மாவட்ட நிர்வாகிகள், தலைமை செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், மாநகரச் செயலர் மற்றும் ஒன்றிய, நகர, பேரூர், பகுதி செயலர்கள் சார்பு அணி நிர்வாகிகள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தி.மு.க., தலைவர் ஸ்டாலின் பிறந்தாள், தேர்தல் பணிகள், கட்சி பணிகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளது.