/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
போதைப்பொருள் விற்பனையில் சாதிக்கும் தி.மு.க., அரசு முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன் பேச்சு

ADDED : செப் 25, 2024 05:00 AM

வத்தலக்குண்டு: 'தி.மு.க.,ஆட்சியில் தமிழகம் போதைப்பொருள்விற்கும் மாநிலமாக சாதனை படைத்துள்ளது''என முன்னாள் அமைச்சர்நத்தம்விஸ்வநாதன் பேசினார்.
வத்தலக்குண்டில் நிலக் கோட்டை தொகுதி அ.தி.மு.க., சார்பில் நடந்த அண்ணாத்துரை பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:
ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க., ஆட்சியில்வளர்ச்சிப் பணிகளில் பொய்யான விளம்பரங்களை தருகின்றனர். குற்ற செயல்கள் அதிகரித்து உள்ளது.
தி.மு.க., அரசின் விடியா ஆட்சியில் போதை பொருட்கள் தமிழகத்தில் அதிகமாக விற்பதுவே சாதனையாக உள்ளது.
அண்ணாதுரையின் பெயரை மறைத்து கருணாநிதியின் பெயரை திட்டங்களுக்கு வைப்பதில் சாதனை புரிகிறது. மாநிலத்தின் பெயரை தமிழ்நாடு என மாற்றியது அண்ணாதுரை.ஆனால் கருணாநிதி எனபெயரை மாற்ற துடிக்கிறார்கள் என்றார்.
எம்.எல்.ஏ., தேன்மொழி வரவேற்றார்.நகர செயலாளர் பீர்முகமது தலைமை வகித்தார்.
ஒன்றிய செயலாளர்கள் யாகப்பன், மோகன், பாண்டியன், நல்லதம்பி முன்னிலை வகித்தனர்.நகர செயலாளர்கள் சேகர், தண்டபாணி, மாசனம், மாணவரணி செயலாளர் சுதாகர், இளைஞரணி செயலாளர் ஜெயபாண்டியன், தொழில் நுட்ப அணி செயலாளர் சதீஷ்குமார், பாசறை செயலாளர் தங்கபாண்டியன்பங்கேற்றனர். சிறுபான்மை பிரிவு செயலாளர் ஜான் நன்றி கூறினார்.