/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கால்நடைகளை பாதுகாப்பாக வளர்க்க டாக்டர் அறிவுரை
/
கால்நடைகளை பாதுகாப்பாக வளர்க்க டாக்டர் அறிவுரை
ADDED : அக் 30, 2025 04:17 AM
வடமதுரை: மழை காலத்தில் கால்நடைகளை பாதுகாப்புடன் பராமரிக்கும் வழிமுறைகள் குறித்து டாக்டர் ராஜ்குமார் அறிக்கை: கால்நடைகளை சுற்றுப்புற தட்ப வெப்ப நிலைக்கு ஏற்றவாறு பராமரிப்பது மிக முக்கியம். மழைக்காலத்தில் கால்நடைகளுக்கு நச்சுயிரிகள், நுண்ணுரியிர்கள், ஒட்டுண்ணிகளால் பாதிப்பு ஏற்படும்.
தீவனத்தில் பூஞ்சாண தொற்று ஏற்படுவதால் செரிமானக் குறைவு ஏற்படலாம். குடற்புழுக்களால் ரத்த சோகை, தொழுவம், சுற்றுப்புறங்களில் நீர் தேங்கி நிற்பதால் கொசுக்கள் அதிகமாகி தொற்று நோய் ஏற்படலாம். சினை மாடுகள், கன்றுகள், இளம் ஆட்டுக்குட்டிகளை மழையில் நனைய விடாமல் தொழுவத்தில் கட்ட வேண்டும். சப்பை நோய், தொண்டை அடைப்பான் உள்ளிட்ட தொற்றுநோய்களை தடுக்க தடுப்பூசி போட வேண்டும்.
நோய் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக கால்நடை டாக்டரை அணுக வேண்டும். வைக்கோல், சோளத்தட்டு, காய்ந்த கடலைக் கொடி போன்றவற்றை மழையில் நனையாதவாறு சேமிக்க வேண்டும். 3 நாட்களுக்குமேல் நனைந்த உலர் தீவனங்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும். தாது உப்பு கலவை, கட்டிகளை வழங்கினால் ஊட்டசத்து குறைபாட்டை தடுக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.

