UPDATED : நவ 06, 2026 07:31 PM
ADDED : நவ 06, 2026 05:47 PM
அ நிறம் | அளவு
பழநி:
தமிழகத்தில் பத்திரப்பதிவுத்துறையால் அமல்படுத்தப்பட்டுள்ள ‘ஸ்டார் 3.0’ காகிதமில்லா பத்திரப்பதிவு திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பழநி மாவட்ட பதிவாளர் அலுவலகம் முன் இன்று (நவ.,6) கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒருங்கிணைப்பாளர்கள் கணேசன், கந்தசாமிராஜன், ராஜ்குமார், கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் சத்திரப்பட்டி, பழநி 1, 2, கீரனுார், கள்ளிமந்தயம், வடமதுரை, வேடசந்துார், குஜிலியம்பாறை, ஒட்டன்சத்திரம் பதிவு அலுவலக ஆவண எழுத்தர்கள், ஆவண தயாரிப்பாளர்கள், வழக்கறிஞர்கள், தட்டச்சர்கள் பலர் பங்கேற்றனர்.
தங்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கும் ஸ்டார் 3.0 திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தி கோஷமிட்டனர்.
