/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
டப்பாவுக்குள் சிக்கிய நாய் மீட்பு
/
டப்பாவுக்குள் சிக்கிய நாய் மீட்பு
ADDED : ஆக 29, 2025 03:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார்: வேடசந்துார் வசந்தம் நகர் குப்பை கொட்டும் இடத்தில்  பிளாஸ்டிக் டப்பா இருந்துள்ளது. அதனுள் இருந்த பொருட்களை தின்பதற்காக தெருநாய் ஒன்று உள்ளே தலையை விட்டுள்ளது.
தலையை வெளியே எடுக்க முடியாததால்  நான்கு நாட்களாக, உணவு தண்ணீர் இன்றி தலையில் மாட்டிய டப்பாவுடன்  சுற்றி திரிந்தது.   அப்பகுதியை  சேர்ந்த கல்லுாரி மாணவி ஜனனி   தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தார். நிலை அலுவலர் ஜேம்ஸ் அருள் பிரகாஷ் தலைமையிலான வீரர்கள்  நாயை பிடித்து டப்பாவை வெளியே எடுத்தனர்.

