/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வெள்ளகெவி கிராமத்தில் தொடரும் டோலி பயணம்
/
வெள்ளகெவி கிராமத்தில் தொடரும் டோலி பயணம்
ADDED : மார் 16, 2025 06:34 AM

கொடைக்கானல்; கொடைக்கானல் வெள்ளகெவி கிராமத்தில்கிராமத்தில் ரோடு வசதியின்றி டோலி கட்டி துாக்கி செல்லும் அவலம் தொடர்கிறது.
கொடைக்கானல் நகர்பகுதி பரிணாம ரீதியாக வளர்ச்சி அடைந்துள்ளது. இருந்த போதும் வெள்ளகெவி சின்னுார், பெரியூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு இதுவரை ரோடு வசதியின்றி இப்பகுதி மக்கள் அவதிப்படும் நிலை காலம் காலமாக தொடர்கிறது.சில தினங்களுக்கு முன் வெள்ளகெவி கிராமத்தை சேர்ந்த ராம்குமார் மனைவி மேகலா 35, உடல் நலம் பாதிக்கப்பட்டு டோலி கட்டி துாக்கிச் செல்லும் வழியில் பலியானார்.
இதை தொடர்ந்து நேற்று காலை லிங்கம்மாள் 56, உடல் நலம் பாதிக்க கிராமத்தினர் டோலி கட்டி தேவி மாவட்டம் பெரியகுளம் மருத்துவமனைக்கு துாக்கி சென்றனர். கொடைக்கானல் பெரியகுளத்திற்கு இடையே தலா 8 கி.மீ., துாரம் ரோடு இல்லாத நிலையில் கிராம மக்களின் துயரம் தொடர்கிறது. இப்பிரச்னையில் அரசு துரிதம் காட்டி ரோடு அமைக்க வேண்டும்.
வட்டார வளர்ச்சி அலுவலர் ஒருவர் கூறுகையில்,''கொடைக்கானலில் இருந்து டால்பின் நோஸ் வரை ரூ.23 கோடியில் ரோடு அமைக்கும் பணிக்கு டெண்டர் விடப்பப்பட்டுள்ளது. எஞ்சிய டால்பின் நோஸ் முதல் வெள்ளகெவி வரை 5 கி.மீ., துாரம் ரோடு அமைக்கும் பணிக்கான ஆய்வு நடந்து வருகிறது'' என்றார்.