/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வதந்திகளை பரப்பாதீங்க எஸ்.பி., அறிவுறுத்தல்
/
வதந்திகளை பரப்பாதீங்க எஸ்.பி., அறிவுறுத்தல்
ADDED : மார் 08, 2024 01:41 AM
பழநி: திண்டுக்கல் மாவட்டத்தில் சில பகுதிகளில் குழந்தை கடத்தல் குறித்த வதந்தி பரவி வர, இத்தகைய வதந்தி பரப்பிய நபர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளதாக எஸ்.பி., பிரதீப் தெரிவித்தார்.
பழநியில் அவர் கூறியதாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் குழந்தைகள் கடத்தப்படுவதாக தகவல் பரவ தனிப்படை அமைத்து விசாரணை நடைபெற்றதில் தகவல் முற்றிலும் பொய்யானது என்பது தெரிய வந்தது. ஒட்டன்சத்திரம், எரியோடு போலீஸ் ஸ்டேஷனில் வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில் அருப்புக்கோட்டையைச் சேர்ந்த வடிவேல், தங்கராஜ் இருவரை கைது செய்துள்ளோம்.
இதுபோன்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். சந்தேகம் ஏற்பட்டால் பொதுமக்கள் விசாரிக்காமல் போலீசாரை தொடர்பு கொள்ள வேண்டும். வட மாநில தொழிலாளர்கள் பற்றிய தகவல்கள் போலீசில் பதிவு செய்யப்பட்டுள்ளன. வட மாநில நபர்களிடம் பொதுமக்கள் விசாரிக்கும் போது சரியாக தகவல் தராத நிலையில் வாக்குவாதம் ஏற்படுகிறது.
இதன் தகவல்களை உண்மை தன்மை தெரியாமல் பரப்புவதால் இத்தகைய பிரச்னை ஏற்படுகிறது. குட்காவை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ,போலீசார் இணைந்து பறிமுதல் செய்து வருகின்றனர். பிப்ரவரியில் மட்டும் 2000 கிலோக்கு மேல் குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நத்தம் பகுதியில் குட்கா வியாபாரம் செய்தவர் மீது குண்டர் சட்டம் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பழநியில் போதுமான அளவு போலீஸ் உள்ளது. முக்கிய நாட்களில் மற்ற பகுதியிலிருந்து போலீசார் வரவழைக்கபடுவர் என்றார்.

