/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அய்யம்பாளையத்தில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம்
/
அய்யம்பாளையத்தில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம்
ADDED : ஜன 13, 2025 04:15 AM

பட்டிவீரன்பட்டி : அய்யம்பாளையத்தில் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் பெரியசாமி பிறந்த நாள்,பொங்கலை முன்னிட்டு தி.மு.க.,வினர் இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடத்தினர். ஆத்துார் மேற்கு ஒன்றிய செயலாளர் ராமன், கலை இலக்கிய பிரிவு செயலாளர் அய்யப்பன் தலைமை வகித்தனர்.
முன்னாள் ஒன்றிய செயலாளர் முரளிதரன், அய்யம்பாளையம் நகர செயலாளர் தங்கராஜ் முன்னிலை வகித்தனர். பழநி எம்.எல்.ஏ., செந்தில்குமார், திண்டுக்கல் எம்.பி., சச்சிதானந்தம் துவக்கி வைத்தனர். பெரிய மாடு, நடு மாடு, பூஞ்சிட்டு பிரிவுகளில் பந்தயம் நடந்தது. பெரிய மாட்டுப் பிரிவிற்கு முதல் பரிசாக ரூ. 1 லட்சம், 2ம் பரிசாக ரூ. 70,000, 3ம் பரிசாக ரூ.50,000 வழங்கப்பட்டது. திண்டுக்கல், தேனி, மதுரை, திருச்சி, புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட பல மாவட்டங்களிலிருந்து போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
சிறந்த சாரதி, முதல் பரிசு வென்ற வண்டியின் உரிமையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நிலக்கோட்டை டி.எஸ்.பி., செந்தில்குமார், பட்டிவீரன்பட்டி இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.