ADDED : டிச 18, 2024 05:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம் : ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் தட்டைப்பயறு விலை இரட்டிப்பாக அதிகரித்து கிலோ ரூ.40 க்கு விற்றதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
ஒட்டன்சத்திரம், வடகாடு கண்ணனுார் கோமாளிபட்டி சுற்றிய கிராம பகுதிகளில் தட்டைப் பயறு அதிகமாக விளைவிக்கப்படுகிறது.
சில நாட்களுக்கு முன்பு அறுவடை தொடர்ந்ததால் மார்க்கெட்டிற்கு வரத்து அதிகமாக இருந்தது.
அப்போது கிலோ தட்டைப் பயறு ரூ.20 க்கு விற்றது. இந்நிலையில் மழை காரணமாக வரத்து குறைந்ததால் விலை ஏற்றமடைந்து வருகிறது.
நேற்று ஒரு கிலோ தட்டைப்பயறு ரூ.40 க்கு விற்றது.
கமிஷன் கடை உரிமையாளர் மூர்த்தி கூறுகையில், வரத்து குறைவு காரணமாக தட்டைப் பயறு விலைஅதிகரித்து வருகிறது என்றார்.