/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வரதட்சணை கொடுமை கணவர் மீது வழக்கு
/
வரதட்சணை கொடுமை கணவர் மீது வழக்கு
ADDED : ஜூலை 23, 2011 09:45 PM
ஒட்டன்சத்திரம் : இடையகோட்டை அருகிலுள்ள இ.கல்லுப்பட்டியை சேர்ந்தவர் விஜயகுமார்.
இவருக்கும் செல்விக்கும் சென்ற ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்தின் போது 56 பவுன் நகை மற்றும் சீர்வரிசை கொடுத்துள்ளனர். விஜயகுமார் தன் தந்தையுடன் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகிறார். இந்நிலையில் விஜயகுமார் தன்னுடைய தந்தை மாரிமுத்து, தாய் முத்துலட்சுமி, பெரியப்பா கருப்புச்சாமி, பெரியப்பாவின் மகன் செல்வராஜ், செல்வராஜின் மனைவி ஜென்சி ஆகியோரின் தூண்டுதலின் பேரில் 25 லட்சம் ரூபாய் மற்றும் ஒரு கார் வாங்கிவரச்சொல்லி செல்வியை கொடுமைப்படுத்தியுள்ளார். ஒட்டன்சத்திரம் அனை த்து மகளிர் போலீசில் செல்வி கொடுத்த புகாரில் இன்ஸ்பெக்டர் அன்னக்கிளி, விஜயகுமார் உட்பட ஐந்து பேர் மீது வழக்குபதிவு செய்துள்ளார்.

