/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கோடை காலங்களில் சிதிலமடைந்த குளங்களை துார்வாரலாமே: துறை ரீதியான நடவடிக்கை அவசியம்
/
கோடை காலங்களில் சிதிலமடைந்த குளங்களை துார்வாரலாமே: துறை ரீதியான நடவடிக்கை அவசியம்
கோடை காலங்களில் சிதிலமடைந்த குளங்களை துார்வாரலாமே: துறை ரீதியான நடவடிக்கை அவசியம்
கோடை காலங்களில் சிதிலமடைந்த குளங்களை துார்வாரலாமே: துறை ரீதியான நடவடிக்கை அவசியம்
ADDED : மே 10, 2024 05:41 AM

மாவட்டத்தைப் பொறுத்தவரையில் விவசாயம் தான் பிரதானமாக இருக்கிறது. அதோடு 6க்கு மேற்பட்ட அணைகள், ஏராளமான ஏரிகள் என நீர்வழித்தடங்கள் அதிகமுள்ள பகுதியாகவும் இருக்கிறது.
மாவட்டம் முழுவதும் 5 வருடங்களுக்கு முன் கணக்கெடுப்பின் படி பொதுப்பணித்துறை குளங்கள் 295, ஊராட்சி குளங்கள் 605, ஊராட்சி ஒன்றிய குளங்கள் 435, டவுன் பஞ்சாயத்து குளங்கள் 11, தனியார் குளங்கள் 11 என 1401 உள்ளன. அதோடு குடகனாறு, நங்காஞ்சியாறு, சண்முகநதி, அழகாபுரி உள்ளிட்ட ஆறுகளும், வரதமாநதி, குதிரயைாறு, பாலாறு, பொருந்தலாறு என பல்வேறு அணைகளும் உள்ளது. அணைகளலிருந்து வரும் குளங்கள், ஆறுகளுக்குச் செல்லும் நீர்வழித்தடங்கள் பல்வேறு காரணங்களால் துார்வாரப்படாமலும், முறை பராமரிக்காமல் யாக சிதிலமடைந்தும் காணப்படுகின்றன.
பல இடங்களில் கணக்கில்லாமல் கனிமவளங்கள் வேறு கொள்ளையடிக்கப்படுகிறது. திண்டுக்கல் மாவட்டம் என்றாலே பஞ்சம் உள்ள பகுதி என்ற பெயரும் இருக்கிறது. மழைநீர் ,நீர்தேக்கம், அணைகளில் உள்ள நீரே, பொதுமக்களின் குடிநீர் பற்றாக்குறையை போக்கவும், விவசாயத்திற்கும்பயன்படுகிறது.
பெரும்பாலான குளங்கள் பராமரிப்பின்றி காணப்படுகின்றன. ரெட்டியார்சத்திரம் பெருமாள் கோயில் குளம், பாலகிருஷ்ணாபுரம் குளம், திண்டுக்கல் ஏ.வெள்ளோடு பெரியகுளம், நரசிங்கபுரம் குட்டையாகுளம், செல்லமந்தாடி சந்தனவர்த்தினி ஆறு உள்ளிட்டவை பராமரிப்பின்றி கிடக்கிறது.
பழநி வையாபுரி குளம், தட்டான் குளம், சண்முக நதி போன்றவை அமலைச் செடிகளாலும், குப்பை கழிவுகளாலும் நிரம்பிக் கிடக்கிறது.
குடகனாறு வழித்தடங்கள் முழுவதும் புதர்மண்டியும், ஆக்கிரமிப்பாலும் நிறைந்து வழிகின்றன. ஊராட்சி பகுதிகளில் உள்ள குளங்கள் கேட்பாரற்று உள்ளன. இதன்மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.