/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சாக்கடையில் குடிநீர் குழாய்கள் நோய் தொற்று அபாயம்
/
சாக்கடையில் குடிநீர் குழாய்கள் நோய் தொற்று அபாயம்
சாக்கடையில் குடிநீர் குழாய்கள் நோய் தொற்று அபாயம்
சாக்கடையில் குடிநீர் குழாய்கள் நோய் தொற்று அபாயம்
ADDED : டிச 06, 2025 09:41 AM

கொடைக்கானல்: கொடைக்கானலில் சாக்கடையில் செல்லும் குடிநீர் குழாயால் தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
கொடைக்கானல் நகராட்சியின் குடிநீர் ஆதாரமாக மனோரத்தினம் சோலை அணை , கீழ் குண்டாறு அணை உள்ளது.நகராட்சியில் உள்ள 24 வார்டுகளுக்கும் ஆங்காங்கே குடிநீர் தொட்டிகள் அமைத்து பகுதி வாரியாக குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில் அண்ணா சாலையில் உள்ள தரைமட்ட தொட்டியில் இருந்து குடியிருப்பு பகுதிகளுக்கு செல்லும் குடிநீர் குழாய்கள் சாக்கடையில் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றில் பெருக்கெடுக்கும் கழிவு நீர் குழாய் மேல் வடிந்து ஒடுகிறது. இதனால் சுகாதாரக்கேடும், தொற்றுநோய் அபாயம் உள்ளது.
நகரில் ஆங்காங்கே இது போன்ற நிலை பரவலாக உள்ளது.
நகராட்சி பொது மக்களுக்கு சப்ளை செய்யப்படும் குடிநீர் குழாய்கள் சாக்கடையின் வழியாக செல்லாமல் இருக்க பாதுகாப்பான முறையில் குடிநீர் இணைப்புகளை கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும்.

