ADDED : ஜூலை 21, 2025 02:25 AM
எரியோடு: குடிநீர் வினியோகம் இல்லாததால் காலி குடங்களுடன் முள்ளாம்பட்டி பொதுமக்கள் ரோடுமறியலில் ஈடுபட்டனர்.
பாகாநத்தம் ஊராட்சி முள்ளாம்பட்டி, சவடகவுண்டன்பட்டி கிராமங்களுக்கு ஒரு ஆழ்துளை கிணற்றில் இருந்து நீர் எடுத்து பல ஆண்டுகளாக குடிநீர் சப்ளை நடந்தது.
இந்நிலையில் தற்போது முள்ளாம்பட்டி பகுதிக்கென தனியே ஒரு ஆழ்துளை கிணறு அமைத்து 10 ஆயிரம் லிட்டர் மேல்நிலைத் தொட்டி மூலம் கடந்த சில ஆண்டுகளாக சப்ளை நடந்தது.
இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக ஆழ்துளை கிணறு வறண்டு போனதால், ஊராட்சி மூலம் அவ்வப்போது டிராக்டர் மூலம் குடிநீர் வினியோகம் நடந்து வருகிறது.
இதுபோதுமான இல்லாததால் அதிருப்தியான கிராம மக்கள் நேற்று காலை எரியோடு அய்யலுார் ரோட்டில் காலி குடங்களுடன் ஒரு மணி நேரம் மறியல் போராட்டம் நடத்தினர்.
எரியோடு போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, பிரச்னை தீர நடவடிக்கை எடுப்பதாக கூற போராட்டம் முடிவுற்றது.