/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
உள்ளூர் வரத்து அதிகரிப்பால் விலை சரிந்த முருங்கை
/
உள்ளூர் வரத்து அதிகரிப்பால் விலை சரிந்த முருங்கை
உள்ளூர் வரத்து அதிகரிப்பால் விலை சரிந்த முருங்கை
உள்ளூர் வரத்து அதிகரிப்பால் விலை சரிந்த முருங்கை
ADDED : மார் 03, 2026 03:05 AM

ஒட்டன்சத்திரம்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் முருங்கைக்காய் உள்ளூர் வரத்து அதிகரிப்பால் விலை வீழ்ச்சி அடைந்து கிலோ ரூ.60க்கு நேற்று விற்பனையானது.
இம்மாவட்டத்தில் ஒட்டன்சத்திரம், காவேரியம்மாபட்டி, அம்பிளிக்கை, அரசப்பபிள்ளைபட்டி, சாலைப்புதூர், இடையகோட்டை, மார்க்கம்பட்டி, ஜவ்வாதுபட்டி, கள்ளிமந்தையம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் செடி முருங்கை அதிகமாக பயிரிடப்படுகிறது.
சில மாதங்களாக உள்ளூர் பகுதிகளில் விளைச்சல் குறைவாக இருந்ததால் வெளிமாநிலங்களில் இருந்து லாரிகளில் ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டிற்கு கொண்டு வரப்பட்ட முருங்கைக்காய் கிலோ ரூ.100க்கு விற்பனை செய்யப்பட்டது.
இதற்கிடையே உள்ளூர் பகுதிகளில் முருங்கை அறுவடை மும்முரமாக நடந்து வருகிறது. இதனால் மார்க்கெட்டிற்கு வரத்து அதிகரித்து அதன் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. நேற்று செடி முருங்கை கிலோ ரூ.60க்கு விற்பனை ஆனது.
முருங்கைக்காய் வியாபாரிகள் கூறுகையில், 'ரம்ஜான் நோன்பு காரணமாக ஏற்கனவே காய்கறிகள் விற்பனை குறைந்தது. இனிவரும் நாட்களில் முருங்கை வரத்து இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. விலை மேலும் சரிவடையும்,' என்றனர்.

