/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
புழுதி பறக்கும் லெக்கையன்கோட்டை ரோடு: பரிதவிப்பில் வாகன ஓட்டிகள்
/
புழுதி பறக்கும் லெக்கையன்கோட்டை ரோடு: பரிதவிப்பில் வாகன ஓட்டிகள்
புழுதி பறக்கும் லெக்கையன்கோட்டை ரோடு: பரிதவிப்பில் வாகன ஓட்டிகள்
புழுதி பறக்கும் லெக்கையன்கோட்டை ரோடு: பரிதவிப்பில் வாகன ஓட்டிகள்
ADDED : டிச 18, 2025 06:10 AM
ஒட்டன்சத்திரம்: லெக்கையன்கோட்டை ரோட்டில் வாகனங்கள் செல்லும்போது பறக்கும் புழுதி ரோட்டை சூழ்வதால் வாகனஓட்டிகள் பரிதவிக்கின்றனர்.
ஒட்டன்சத்திரத்தில் இருந்து மெட்டூர் வரை புதிதாக நான்கு வழிச்சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஒட்டன்சத்திரம் அருகே லெக்கையன்கோட்டையில் பாலம் கட்டும் பணிகள் நடந்து வருகிறது. லெக்கையன்கோட்டை மூலச்சத்திரத்திற்கு இடைப்பட்ட ரோட்டில் வானங்கள் செல்லும் போது புழுதி கிளம்பி ரோட்டை மறைக்கிறது. மேலும் ரோடு பள்ளம் மேடுமாக காட்சியளிப்பதால் வாகனங்கள் கிடு கிடுவென அசைந்தபடி செல்ல வேண்டி உள்ளது.
புழுதி ரோட்டை சூழ்வதால் இருசக்கர வாகன ஓட்டிகளின் கண்களை பதம் பார்க்கிறது.
தூசி ரோடு முழுவதையும் மறைப்பதால் முன்னால் செல்லும் வாகனங்கள் சரிவர தெரிவதில்லை. இதனால் விபத்து ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
பாலம் கட்டும் இடங்களை சுற்றி ஓட்டல்கள், குடியிருப்புகள், கடைகள் உள்ளன.
தூசியால் ஓட்டல் கடைகளுக்கு வருவோர் மிகவும் பாதிப்புக்கு ஆளாகின்றனர். இதனால் சுவாசக் கோளாறு ஏற்படும் வாய்ப்பு உள்ளது.
அவ்வப்போது மண்ணுக்கு தண்ணீர் தெளித்து பணிகளை மேற்கொண்டால் இந்த பிரச்னை ஏற்பட வாய்ப்பு இல்லை.

