ADDED : மார் 01, 2024 06:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட தோல் பதனிடும் தொழிலாளர் சி.ஐ.டி.யூ., எல்.பி.எப்., சங்கம் சார்பில்
நடப்பு ஆண்டிற்கான ஈஸ்டர் போனஸ் தொகை 25 சதவீதம் கோரி பேகம்பூரிலுள்ள தோல் வர்த்தகர் சங்க கட்டடத்தில் இருதரப்பு பேச்சுவார்த்தை தோல் வர்த்தகர் தலைவர் மஹபூப்சுபானி தலைமையில் நடந்தது.
உபதலைவர் அப்துல்ரஹிம் முன்னிலை வகித்தார். சி.ஐ.டி.யூ.சங்க தலைவர் கணேசன், செயலாளர் ஜெயசீலன், பொருளாளர் தவக்குமார், துணைத்தலைவர் ஜெய்லானி, எல்.பி.எப். சங்க தலைவர் ராமமூர்த்தி, செயலாளர் அழகர்சாமி, பொருளாளர் வெங்கிடுசாமி பங்கேற்றனர்.
பேச்சுவார்த்தையில் 23 சதவீதம் ஈஸ்டர் போனஸ் வழங்க நிர்வாக உடன்பாடு கையெழுத்தானது. இதனால் 1500 க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் பயனடைவர் என நிர்வாகிகள் கூறினர்.

