UPDATED : நவ 05, 2026 11:47 PM
ADDED : நவ 04, 2026 06:08 PM

அ நிறம் | அளவு
திண்டுக்கல்: சிறுமலை வனச்சரகம் சார்பில் சிறுமலை பிரிவு வனத்துறை சோதனைச்சாவடி அருகே சுற்றுச்சூழல் நட்பு அங்காடி திறப்பு விழா நடந்தது. மாவட்ட வனஅலுவலர் நாகசதீஷ் கிடிஜாலா, சிறுமலை பழங்குடியின சங்கத் தலைவர் லட்சுமணன் ஆகியோர் அங்காடியை திறந்து வைத்து முதல் விற்பனையை துவக்கினர்.
இங்கு மலைப்பகுதிகளில் விளையும் மிளகு, காபி, தேயிலை, யூகலிப்டஸ் தைலம், தேன், வாழைப்பழம், பலாப்பழம் உள்ளிட்டவை விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.
இதுபோல சுற்றுச்சூழல் பூங்காவிலும் சூழல் நட்பு அங்காடி செயல்படும் என வனத்துறையினர் தெரிவித்னர். நிகழ்ச்சியை சிறுமலை வனச்சரகர் சுரேஷ் ஒருங்கிணைத்தார்.
