UPDATED : நவ 18, 2026 10:00 PM
ADDED : நவ 18, 2026 10:00 PM
அ நிறம் | அளவு
கோபால்பட்டி: கோபால்பட்டி அருகே கோ.அய்யாபட்டி அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்களின் கல்வி, பொது அறிவை மேம்படுத்தும் நோக்கில் இப்பள்ளி ஆசிரியர்கள் தங்களது செலவில் கடந்த 8 ஆண்டுகளாக சுற்றுலா அழைத்துச் சென்று வருகின்றனர்.
இந்தாண்டு குழந்தைகள் தினத்தை முன்னிட்டு தலைமையாசிரியர் வின்சென்ட் பால்ராஜ் தலைமையில் ஆசிரியர்கள் சுருளி அருவி, கம்பம், வைகை அணை உள்ளிட்ட சுற்றுலாத் தலங்களுக்கு மாணவர்களை அழைத்துச் சென்றனர். புத்தகங்களில் படிக்கும் விஷயங்களை நேரில் பார்த்து தெரிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்ததால் மாணவ, மாணவிகள் உற்சாகமும், மகிழ்ச்சியும் அடைந்தனர்.
