UPDATED : நவ 07, 2026 07:08 PM
ADDED : நவ 07, 2026 07:06 PM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்: பாளையம்- – வெள்ளியணை ரயில்வே ஸ்டேஷனுக்கு இடையே தண்டவாளத்தில் 60 வயது முதியவர் இறந்து கிடப்பதாக திண்டுக்கல் ரயில்வே போலீசுக்கு தகவல் வந்தது.
அதன் பேரில் எஸ்.ஐ., பாஸ்கரன் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். அதில் பாலக்காடு- – சென்னை ரயிலில் பயணம் செய்த முதியவர் ரயிலில் இருந்து தவறி விழுந்து இறந்தது தெரிந்தது. பலியானவர் சாமியார் உடை அணிந்திருந்தார். வேறு விவரங்கள் தெரியவில்லை. ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.
