/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
குறைதீர் கூட்டத்தில் தீக்குளிக்க முயன்ற முதியவர்: வாக்குவாதம்
/
குறைதீர் கூட்டத்தில் தீக்குளிக்க முயன்ற முதியவர்: வாக்குவாதம்
குறைதீர் கூட்டத்தில் தீக்குளிக்க முயன்ற முதியவர்: வாக்குவாதம்
குறைதீர் கூட்டத்தில் தீக்குளிக்க முயன்ற முதியவர்: வாக்குவாதம்
ADDED : ஏப் 22, 2025 06:30 AM
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் நடந்த குறைதீர் கூட்டத்தில் முதியவர் தீக்குளிக்க முயன்ற நிலையில், மனுஅளிக்க வாயிலை அடைத்ததால் போலீசாருடன் மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் கலெக்டர் சரவணன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் 527 மனுக்கள் பெறப்பட்டதில் தகுதியான மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது.
இங்கு வந்த பழைய வத்தலக்குண்டு காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்த கூலித்தொழிலாளி சென்னன் 70.
உடலில் மண்ணென்ணெய் ஊற்றி தற்கொலைக்கு முயன்றார்.
பாதுகாப்பு போலீசார் தடுத்தனர். விசாரணையில், 24 ஆண்டுகளுக்கு முன்பு சென்னனுக்கு அரசு சார்பில் இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.
அதில் குடிசை போட்டு வசித்து வந்த நிலையில் 2 ஆண்டுகளுக்கு முன்பு அவரது இடம் வேறு ஒருவரின் பெயருக்கு பட்டா மாற்றம் செய்யப்பட்டிருந்தது.
வருவாய்த்துறை அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை.
இதில் விரக்தியடைந்து தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.
அவரை எச்சரித்த போலீசார் கலெக்டரிடம் கோரிக்கை மனு கொடுக்க வைத்தனர்.இதன் பின் அவரை விசாரணைக்காக தாடிக்கொம்பு போலீசார் அழைத்து சென்றனர்.
வடமதுரையை சேர்ந்த ராமன் தேசிய கொடியை கையில் ஏந்தியபடி கலெக்டர் அலுவலகம் வந்து கோஷமிட்டார். அவர் கூறியதாவது:
வீட்டுமனை பட்டா, சாலை வசதி, மின்சார வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வடமதுரை ஆதம்ஸ்நகர் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு கிடைக்கவில்லை.
இதற்காக பல ஆண்டுகளாக அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர். எனவே அடிப்படை வசதிகளை விரைவாக செய்து கொடுக்க வேண்டும் என்றார்.
திண்டுக்கல் மாவட்ட அண்ணா பொது தொழிலாளர் சங்க நிர்வாகிகள் சார்பில் கொடுத்த மனுவில், நிலக்கோட்டை, விளாம்பட்டி தனியார் மில்லில் வேலை பார்க்கும் தொழிலாளர்களுக்கு முறையாக சம்பளம் வழங்குவதில்லை.
முறையாக சம்பளம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டிருந்தது.
வாக்குவாதத்தில் ஈடுபட்ட மக்கள்
தமிழ்புத்தாண்டு என்பதால் ஏப்.14ல் குறைதீர் கூட்டம் நடக்கவில்லை. இதனால் நேற்று மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமானோர் கலெக்டர் அலுவலகம் வந்து மனு கொடுத்தனர்.
மனுக்கள் பதிவு செய்யும் இடத்தில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. கூட்ட அரங்கிற்கு செல்பவர்களை வரிசைப்படுத்தி அனுப்புவதற்காக கூட்ட அரங்கின் நுழைவு வாயிலை போலீசார் மூடினர்.
இதனால் தங்களை நீண்ட நேரம் காக்க வைப்பதாக கூறி போலீசாரிடம் பொதுமக்கள் வாக்குவாதம் செய்தனர். இது வாரந்தோறும் தொடர்கதையாகிறது.