/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
காட்டுமாடு தாக்கி மூதாட்டி காயம்
/
காட்டுமாடு தாக்கி மூதாட்டி காயம்
ADDED : நவ 25, 2025 04:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல்:கொடைக்கானலில் காட்டுமாடு தாக்கியதில் மூதாட்டி படுகாயம் அடைந்தார்.
கொடைக்கானல்
குருசாமிபள்ளத்தை சேர்ந்தவர் பாப்பா 70. நேற்று வீட்டிலிருந்து
வெளியே வந்த போது மழை, அடர் பனிமூட்டத்தில் எதிரே வருபவர்கள்
தெரியாத நிலையில் அவ்வழியே புதரில் இருந்த காட்டுமாடு
தாக்கியதில் படுகாயமடைந்தார்.
கொடைக்கானல் அரசு
மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் மேல் சிகிச்சைக்காக தேனி
அரசு மருத்துவக் கல்லுாரியில் சேர்க்கப்பட்டார். கொடைக்கானல்
வனத்துறையினர் விசாரிக்கின்றனர்.தொடர்ந்து காட்டுமாடுகளால்
பொதுமக்கள் அச்சுறுத்தலுக்கு ஆளாவதும், தாக்கப்படுவது
மக்களிடையே கவலையளித்துள்ளது.

