ADDED : மார் 13, 2024 12:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : இம்மாத இறுதிக்குள் தேர்தல் தேதி அறிவிக்கப்படலாம் என்ற நிலையில் தேர்தல் தொடர்பான ஆலோசனைக் கூட்டங்கள், குழுக்கள் அமைக்கும் பணிகள் போன்றவை நடந்து வருகின்றன. அதன்படி 7 சட்டசபை தொகுதிகளுக்கும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
பிரசாரங்களை வீடியோ எடுக்கும் குழு, வீடியோ பதிவுகளை பார்க்கும் குழு, தேர்தல் செலவினத்தை கண்காணிக்கும் குழு என 3 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுக்களுக்கு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு பயிற்சிகளும் வழங்கப்பட்டுள்ளது.

