/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
உயர் மட்டத்திற்கு சென்ற மின் ஒயர்கள்
/
உயர் மட்டத்திற்கு சென்ற மின் ஒயர்கள்
ADDED : டிச 13, 2024 04:57 AM

வடமதுரை: வடமதுரை நாடு கண்டனுாரில் இருந்து அத்திக்குளத்துப்பட்டி செல்லும் ரோட்டின் குறுக்கே செல்லும் மின்ஒயர்கள் மீது டிச.8 ல் சென்ற வைக்கோல் லோடு லாரி மோதியது. இதனால் ஒரு மின்கம்பத்தின் உச்சி நொறுங்கியும், 2 கம்பங்கள் சாய்வு நிலைக்கு மாறின. இச்சம்பவத்திற்கு பின்னர் ரோட்டில் தாழ்வான உயரத்தில் மின் ஒயர்கள் தொங்கின.
லாரியை மின்வாரிய அதிகாரிகளிடம் ஒப்படைத்தும் சீரமைப்பு பணி செய்யவில்லை. இவ்வழியே செல்லும் பள்ளி, மில் வாகனங்கள் மின் விபத்தில் சிக்கும் ஆபத்து உள்ளதால் கலக்கமான மனநிலையில் அப்பகுதியினர் பரிதவித்தனர். மின்ஒயர் குறுக்கிட்ட பகுதியில் கற்களை அடுக்கி வைத்து சிறியளவில் எச்சரிக்கை விழிப்புணர்வு செய்திருந்தனர்.
இது தொடர்பாக தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக புதிய மின்கம்பம் நட்டு மின்ஒயர்களை அதன் உயர் மட்டத்திற்கு மாற்றி அமைத்தனர். மின் விபத்து அபாயம் நீங்க உதவிய தினமலர் நாளிதழுக்கு அப்பகுதியினர் நன்றி தெரிவித்தனர்.