/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மின்கம்பியாள் தகுதி தேர்வு தேதி மாற்றம்
/
மின்கம்பியாள் தகுதி தேர்வு தேதி மாற்றம்
ADDED : டிச 18, 2025 06:31 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் கலெக்டர் சரவணன் செய்திக்குறிப்பு: மின்கம்பியாள் உதவியாளர் தகுதிகாண் தேர்வு டிச.13, 14 ல் நடைபெற இருந்த நிலையில் டிச.27, 28 ல் வடசென்னை, அம்பத்தூர், கோயம்புத்தூர், திருப்பூர், கடலூர், திருச்சிராப்பள்ளி, நாகப்பட்டினம், திண்டுக்கல்,
மதுரை, சேலம், ஈரோடு, தஞ்சாவூர், திருநெல்வேலி, நாகர்கோவில், ஒசூர், உளுந்தூர்பேட்டை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விருதுநகர், வேலூர், நாமக்கல் அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் நடைபெறும். விண்ணப்பதாரர்கள் அவரவர் விண்ணப்பித்திருந்த தொழிற்பயிற்சி நிலையங்கள் மூலம் நுழைவுச்சீட்டு பெற்றுக்கொள்ளலாம் என் குறிப்பிட்டுள்ளார்.

