/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஒன்றரை ஆண்டாகியும் வழங்கல மின் இணைப்பு; ரூ.2.75 லட்சம் செலுத்திய விவசாயிகள் ஏமாற்றம்

ADDED : ஜன 03, 2025 06:50 AM

தமிழக அரசு விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கி வருவதால் விவசாயிகளும் ஓரளவு சிரமமின்றி விவசாய தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் மின்சார இணைப்பு கேட்டு ஏராளமானோர் மனு கொடுத்துள்ளதால் 2013 வரை மட்டுமே இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
அதற்குப் பிறகு மனு கொடுத்தவர்கள் காத்திருக்கின்றனர். இந்நிலையில் தமிழக அரசு விவசாயிகளின் நலன் கருதி தட்கல் முறையில் ரூ.2.75 லட்சம் செலுத்தினால்
30 நாட்களுக்குள் கட்டணமில்லா மின் இணைப்பு வழங்கப்படும் என அறிவித்தது. அரசின் இந்த அறிவிப்பு மின் இணைப்பு கேட்டு காத்திருக்கும் விவசாயிகளுக்கு பெரும் ஆறுதலாய் இருந்தது. இதனால் உடனடியாக மின் இணைப்பு பெற விரும்பிய விவசாயிகள் புதிதாக போர்வெல் அமைத்து மின் மோட்டார் பொருத்தி போதிய வருவாய் சான்றுகளுடன் ரூ.2.75 லட்சத்தை தட்கல் திட்டத்தின் கீழ் விண்ணப்பம் செய்தனர். விண்ணப்பம் செலுத்திய விவசாயிகள் பணம் செலுத்தி ஒன்றரை ஆண்டும் கடந்தும் மின் இணைப்பு கிடைக்காமல் காத்திருப்பதாக குமுற துவங்கி உள்ளனர். இது மட்டுமின்றி மின் இணைப்பு கிடைக்காததால் புதிதாக அமைத்த போர் வெல் , மின் மோட்டார் பழுதாகி செலவு செய்த பணம் அனைத்தும் வீணாகி விடுமோ என்ற அச்சத்திலும் உள்ளனர்.