/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கிராம மக்களை மிரளவைக்கும் மின்கம்பம்
/
கிராம மக்களை மிரளவைக்கும் மின்கம்பம்
ADDED : நவ 27, 2024 04:33 AM

ரோடு பள்ளத்தால் விபத்து : நத்தத்தில் இருந்து காரைக்குடி செல்லும் ரோடு மெய்யம்பட்டி பகுதி நடுவே இரு பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. அவ்வழியாக டூவீலர்களில் செல்வோர் தடுமாறி கீழே விழுந்து விபத்து ஏற்பட்டு காயம் ஏற்படும் சூழ்நிலை உருவாகிறது.
--பழனிச்சாமி,நத்தம்.
விபத்துக்கு வழி தரும் மின் கம்பம் : விடுதலைப்பட்டி ஊராட்சி அழகாபுரி டேம் செல்லும் ரோட்டில் மின்கம்பம் சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளது .மழை காலம் என்பதால் கீழே விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால் மின்கம்பத்தை மாற்ற வேண்டும்.
-சந்திரசேகர், மாரம்பாடி.
--------அடிகுழாய் பழுதால் பரிதவிப்பு : திண்டுக்கல் நந்தவனம் ரோட்டில் அடிகுழாய் பழுதடைந்து உள்ளதால் அப்பகுதியில் தண்ணீர் பிடிக்க முடியாத நிலையில் மக்கள் தவிக்கின்றனர். அடி குழாயை பழுது நீக்க துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -ராஜமாணிக்கம், திண்டுக்கல்.
அள்ளப்படாத குப்பை : திண்டுக்கல் மதுரை நான்கு வழிச்சாலை சர்வீஸ் ரோட்டில் குப்பை குவிந்து பல நாட்களாக அள்ளாமல் உள்ளது. பிளாஸ்டிக் மூடையில் கழிவு கலந்த குப்பை போடப்படுவதால் சுற்றுசூழல் பாதிக்கிறது. இதை அகற்ற வேண்டும். -சங்கர், திண்டுக்கல்.
புதர் மண்டி காணப்படும் குளம் : புதுச்சத்திரம் ஊராட்சி கம்பளிநயாக்கன்பட்டி குளம் புதர் மண்டி காணப்படுகிறது. குளத்தின் நீர்ப்பிடிப்பு பகுதியில் உள்ள செடிகொடிகளை அகற்ற சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -கி.ரங்கசாமி, கம்பளிநாயக்கன்பட்டி.
சாக்கடையில் அடைப்பு : ஒட்டன்சத்திரம் தாராபுரம் ரோட்டில் தங்கச்சியம்மாபட்டி காந்தி மார்க்கெட் அருகே சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் கழிவு நீர் தேங்கி தொற்றுக்கு வழி தருகிறது. இதனை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-குமரேசன் ஒட்டன்சத்திரம்.
---------
திறந்த வெளி கழிப்பிடம் : அய்யலுார் குளத்துபட்டி துவக்கப்பள்ளி சுகாதார வளாகம் சேதமடைந்து பயனற்று கிடப்பதால் மாணவர்கள் திறந்த வெளியை கழிப்பிடமாக பயன்படுத்துகின்றனர்.இதனால் இவர்களுக்கே நோய் தொற்று அபாயம் உள்ளது.இதை சீரமைக்க வேண்டும். ---
-பாண்டி, அய்யலுார்.

