/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
யானையால் விளைநிலங்கள் சேதம்: பெண் மயக்கம்
/
யானையால் விளைநிலங்கள் சேதம்: பெண் மயக்கம்
ADDED : ஜூலை 20, 2025 05:03 AM
ஆயக்குடி: பழநி புது ஆயக்குடி அருகே மோர்சம் பட்டி பகுதியில் காட்டு யானையால் விளைபொருட்கள் சேதமடைந்ததை கண்ட பெண் மயக்கமடைந்தார்.
பழநி புது ஆயக்குடி மேற்குத் தொடர்ச்சி மலை அருகே அடிக்கடி காட்டு யானைகள் விளைநிலங்களுக்குள் புகுந்து சேதம் ஏற்படுத்துகிறது. இந்நிலையில் நேற்று மோர்சம்பட்டியை சேர்ந்த சந்திரகலா 47, தோட்டத்தில் பணிபுரிவதற்காக சென்றார். அங்கு காட்டு யானைகள் தென்னை மரங்கள், கொய்யா செடிகளை சேதம் செய்துவிட்டு சென்றது. இதனை கண்ட சந்திரகலா அதிர்ச்சி அடைந்து மயக்கம் அடைந்தார். அவருடன் வந்தவர்கள் அவரை பழநி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர் . வனத்துறையினர் கூறுகையில்,'' யானைகள் விளைநிலங்களை சேதம் செய்தால் தகுந்த இழப்பீடு வழங்கப்படும். பொதுமக்கள் யானைகள் நடமாடும் பகுதியில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். யானைகளை கண்டால் உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் ''என்றனர்.