ADDED : அக் 27, 2025 04:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆயக்குடி: பழநி அருகே விளை நிலத்தில் புகுந்த யானை பயிர்களை சேதப்படுத்தியது.
பழநி சட்டப்பாறை அருகே மா,தென்னை,கொய்யா, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்கள் விளைவிக்கப்பட்டு வருகின்றன. கடந்த சில நாட்களாக இப்பகுதியில் யானைகள் நடமாட்டம் உள்ளது. இந்நிலையில் விவசாயி ராமமூர்த்தி தோட்டத்தில் புகுந்த யானை அங்கு இருந்த 5 தென்னை, தேக்கு மரங்களை சேதப்படுத்தியது. யானைகள் அடிக்கடி இப்பகுதியில் விளைப் பொருட்களை சேதம் செய்வதால் விவசாயிகள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் ஏற்படுகிறது. வனத்துறையினர் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

