ADDED : செப் 23, 2024 05:30 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆயக்குடி, : பழநி ஆயக்குடி ஒட்டன்சத்திரம் வனப்பகுதிக்கு அருகே உள்ள விளை நிலங்களில் புகுந்த யானைகளை விரட்ட வனத்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பழநி ஆயக்குடி வரதமாநதி அணை, பொன்னிமலை சித்தர் கோயில், வண்ணான் துறை, மலை அடிவாரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் முகாமிட்டு உள்ளது.
10க்கும் மேற்பட்ட யானைகள் குட்டிகளுடன் சுற்றி வருகிறது. வனசரகர் ராஜா தலைமையில், வனக்காப்பாளர் ரமேஷ் பாபு உள்ளிட்ட சிறப்பு வனக்குழுவினர் யானை விரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் விளைநிலங்களுக்கு சொந்தமான விவசாயிகள் யானைகளை விரட்டும் நடவடிக்கை உள்ளதால் இரவு நேரங்களில் அப்பகுதிகளுக்கு விவசாயிகள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.