ADDED : டிச 23, 2024 05:28 AM
ஆத்துார்: ஆத்துார் நீர்த்தேக்க பகுதியில் யானைகள் நடமாட்டத்தால் விவசாயிகள் அச்சத்தில் உள்ளனர்.
ஆத்துார் காமராஜர் நீர்த்தேக்க பகுதியில் புதர்ச்செடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளன. மான், காட்டுப்பன்றி, காட்டுமாடு, மயில் போன்ற விலங்குகளின் நடமாட்டம் அதிகம் இருக்கும்.
இவை, வாழை, சோளம் உள்ளிட்ட சாகுபடியை சேதப்படுத்துவது தொடர்கிறது. நான்கு வாரங்களுக்கு முன் சிறுத்தை நடமாட்டத்தால் ஆடுகள், நாய்கள் மாயமானதாக தகவல் பரவியது. சில நாட்களாக நீர்தேக்கம் அருகே மலையடிவார பகுதியில் தனியார் காட்டேஜ்கள் உள்ளன.
இவற்றில் சில இடங்களில் அமைக்கப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராக்களில் யானைகள் நடமாட்டம் பதிவாகியுள்ளது. அடுத்தடுத்து யானைகள் வரிசையாக இப்பகுதியை கடந்து செல்லும் காட்சிகள் பதிவாகியுள்ளன. தகவலறிந்த வனத்துறையினர், இப்பகுதியில் கண்காணிப்பில் ஈடுபடுகின்றனர்.
விவசாயிகள் இரவு நேரங்களில் நடமாட்டத்தை தவிர்க்க அறிவுறுத்தபப்பட்டுள்ளது.