/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அவச ர கோலத்தில் பாராட்டு விழா: காத்திருக்க வைத்த எம்.பி.,க்கள் அதிருப்தியில் தலைமையாசிரியர்கள்
/
அவச ர கோலத்தில் பாராட்டு விழா: காத்திருக்க வைத்த எம்.பி.,க்கள் அதிருப்தியில் தலைமையாசிரியர்கள்
அவச ர கோலத்தில் பாராட்டு விழா: காத்திருக்க வைத்த எம்.பி.,க்கள் அதிருப்தியில் தலைமையாசிரியர்கள்
அவச ர கோலத்தில் பாராட்டு விழா: காத்திருக்க வைத்த எம்.பி.,க்கள் அதிருப்தியில் தலைமையாசிரியர்கள்
ADDED : ஜூன் 28, 2025 12:37 AM
திண்டுக்கல்: மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு கண்காணிப்பு குழுக்கூட்டத்திற்கு எம்.பி.,க்கள், மேயர் உள்ளிட்டோர் தாமதமாக வந்ததுடன் அதே கூட்டத்தில் அரசுப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கு அவசர கோலத்தில் பாராட்டு விழா நடத்த அதிருப்திக்குள்ளாகினர்.
திண்டுக்கல் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு கண்காணிப்பு குழுக்கூட்டம் கண்காணிப்பு குழுத் தலைவரான எம்.பி.,க்கள் சச்சிதானந்தம், ஜோதிமணி தலைமையில் நடந்தது.
தேசிய சுகாதார குழுமம், பெண் குழந்தைகளை காப்போம் கற்பிப்போம், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம், தேசிய மதிய உணவுத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் செயல்படுத்தப்படும் மத்தியஅரசு திட்டங்களின் பயன்பாடு முன்னேற்றம் செயல்பாடுகள் குறித்து துறை அலுவலர்கள் விரிவாக எடுத்துரைத்தனர்.
எம்.எல்.ஏ., காந்திராஜன், மேயர் இளமதி, டி.ஆர்.ஓ., ஜெயபாரதி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் திலகவதி உட்பட அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
காத்திருந்தது காந்திருந்து
10, 11, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளில் 100 சதவீத தேர்ச்சி பெற்ற 72 அரசுப் பள்ளிகளின் தலைமையாசிரியர்களுக்கு விருது வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்ட நிலையில் இதற்காக காலை 10 :00 மணிக்கே கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கிற்கு வரவழைக்கப்பட்டனர்.
இதே அரங்கில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு கண்காணிப்புக் குழு கூட்டத்தில் பங்கேற்க பல்வேறு துறை அலுவலர்களும் வந்திருந்தனர்.
காலை 10:00 மணிக்கு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தும் ஒன்றரை மணி நேரம் தாமதமாக கலெக்டர், எம்.பி., க்கள், மேயர் உள்ளிட்டோர் வந்தனர்.
மாணவர்களை போன்று வரிசையாக நிறுத்தப்பட்ட தலைமையாசிரியர்களுக்கு எம்.பி.,க்கள் சச்சிதானந்தம், ஜோதிமணி கலெக்டர் சரவணன், மேயர் இளமதி, கடைசியாக வந்த எம்.எல்.ஏ., காந்திராஜன் என ஒவ்வொருவரும் கேடயங்களை வழங்கினர்.
ஒரு பள்ளிக்கு வழங்க வேண்டிய கேடயம், மற்றொரு பள்ளிக்கு மாற்றி வழங்கப்பட்டது.
கடைசியாக நின்ற தலைமையாசிரியர்களுக்கு கேடயம் இல்லாத நிலை ஏற்பட்டது. இதனால் ஏற்கனவே கேடயம் பெற்றவர்களிடமிருந்து வாங்கி பெறாதவர்களுக்கு கொடுத்து விழாவை முடித்து வைத்தனர். காலதாமதமாக விழா தொடங்கியதோடு ஒரு சால்வை கூட அணிவிக்காமலும் புகைப்படம் எடுக்க கூட அவகாசம் வழங்காமலும் வெளியேற்றியதால் தலைமையாசிரியர்கள் பலரும் அதிருப்தியாகினர்.
தாமதமாக வந்துவிட்டு அட்வைஸ்
காலை 11:00 மணிக்கு நடக்க வேண்டிய மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு கண்காணிப்புக் குழு கூட்டம் 45 நிமிடம் தாமதமாக தொடங்க அனைவரும் தாமதமாக வந்துவிட்டு, விரைவில் வந்து காத்திருந்த அதிகாரிகளிடம் நேர தாமதமின்மையால் விரைவில் விளக்கம் அளிக்கும்படி கேட்டுக்கொண்டனர்.
எம்.பி.,க்கள் ,கலெக்டர் உள்ளிட்டோர் தாமதமாக வந்துவிட்டு கூட்டத்தை குறிப்பிட்ட நேரத்திற்குள் முடிக்க வேண்டுமென அறிவுறுத்தியது அதிகாரிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.