/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பச்சையாறு குறுக்கே அணை விவசாயிகள் வலியுறுத்தல்
/
பச்சையாறு குறுக்கே அணை விவசாயிகள் வலியுறுத்தல்
ADDED : செப் 24, 2024 05:15 AM
பழநி: பச்சையாறு குறுக்கே அணை கட்ட விவசாயிகள் வலியுறுத்தினர்.
பழநி சப் கலெக்டர் அலுவலகத்தில் பழநி வருவாய் கோட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் சப் கலெக்டர் கிஷன் குமார் தலைமையில் நடந்தது.
தாசில்தார்கள் பழனிச்சாமி சஞ்சய்,தமிழ்ச்செல்வி, பொதுப்பணித்துறை அதிகாரி உதயகுமார் பங்கேற்றனர்.
விவசாயிகள் விவாதம்:
மகுடீஸ்வரன், சின்ன கலையம்புத்துார்: நெய்க்காரப்பட்டி சின்ன கலையம்புத்துார் சாலையில் குறுக்கே உள்ள மின்சார கம்பத்தை அகற்ற வேண்டும். ஓடை புறம்போக்கு நிலத்தை தனியார் சிலர் பெயரில் பட்டா வழங்கப்பட்டு வருகிறது.
சப் கலெக்டர்: அதிகாரிகளுடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
மகுடீஸ்வரன், சின்னகலையம்புத்துார்: பச்சையாற்றின் குறுக்கே அணை அமைக்க வேண்டும்.
இதுபோல் ஆண்டிபட்டியில் தடுப்பணை கட்ட வேண்டும்.
பொதுப்பணித்துறை அதிகாரி: பச்சையாறு அணை கட்டுவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.
தடுப்பணை அமைப்பது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

