/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நகராட்சியாக தரம் உயர்த்த வலியுறுத்தல்
/
நகராட்சியாக தரம் உயர்த்த வலியுறுத்தல்
ADDED : நவ 15, 2024 05:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னாளபட்டி: ஆத்துார் ஒன்றிய மார்க்சிஸ்ட் மாநாடு சின்னாளபட்டியில் நடந்தது. ஒன்றிய செயலாளர் சூசைமேறி தலைமை வகித்தார்.
ஒன்றிய குழு உறுப்பினர் சுரேஷ் கொடி ஏற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ராஜகுமாணிக்கம் துவக்கி வைத்தார். செயலாளார் உள்ளிட்ட 12 பேர் கொண்ட ஒன்றிய குழு நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.சின்னாளபட்டி பேரூராட்சியை நகராட்சியாக தரம் உயர்த்துதல், அய்யம்பாளையம் மருதாநதி அணையின் இரு புற வாய்க்கால்களை சீரமைத்து தண்ணீர் விநியோகத்திற்கு ஏற்பாடு செய்தல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்களை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.